50 வயது மகனை கோடாரியால் வெட்டி கொடூர கொலை! 81 வயது தாயின் பயங்கரமான செயல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
1117Shares

அவுஸ்திரேலியாவில் 81 வயது மதிக்கத்தக்க தாய் ஒருவர், தன்னுடைய சொந்த மகனை கோடாரியால் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னின் Greensborough பகுதியில் கடந்த திங்கட் கிழமை 50 வயது மதிக்கத்தக்க நபர் படுகாயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்ததாக செய்தி வெளியானது.

இந்நிலையில், அந்த கொலை சம்பவத்தை செய்ததே அந்த 50 வயது மதிக்கத்தக்க நபரின் தாய் தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

(Image: 9 News)

இது குறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், சம்பவ தினத்தன்று வீட்டினுள் காயங்களுடன் 81 வயது தாய் பொலிசாரால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது அதே வீட்டில் 50 வயது மதிக்கத்தக்க அவருடைய மகன் இறந்து கிடந்தார்.

(Image: 9 News)

இந்த கொலை சம்பவத்தை அவரின் தாய் ஒப்புக் கொண்டதால், அவர் பின்னர் உடனடியாக கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை அறிந்த அக்கப்பக்கத்தினரில் ஒருவர், அவர் மிகவும் அக்கறை மிகுந்த தாயாக இருந்தார். அவனை மிகவும் நேசித்தால், அவள் தன் குடும்பத்தில் மிகுந்த அர்ப்பணிப்புடன் இருந்தாள். அவன் அமைதியாக இருந்தாள் என்று கூறியுள்ளனர்.

(Image: 9 News)

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்