பிரேசில் நாட்டில் பல்பொருள் அங்காடியில் கருப்பினத்தவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் வன்முறை வெடித்துள்ளது.
தெற்கு பிரேசிலில் உள்ள போர்ட்டோ அலெக்ரே நகரத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில், கருப்பினத்தவரான 40 வயது ஜோவோ அல்பெர்டோ என்பவர் அங்குள்ள பாதுகாவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.
இது குறித்து வீடியோ காட்சிகள் அங்குள்ள உள்ளூர் தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, குறித்த பல்பொருள் அங்காடி போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது.
தற்போது, பிரேசில் முழுவதும் கருப்பினத்தவர் உரிமை மீட்பு முழக்கங்கள் எழத் தொடங்கியுள்ளன.
பிரேசில் நாட்டில் ஏற்கனவே கருப்பின மக்களுக்கான உரிமை குறித்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இந்த சம்பவம் அங்குள்ள மக்களிடையே மேலும் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த பல்பொருள் அங்காடியின் முன்பு மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்திற்கு அந்த நிறுவனம் சார்பில் வருத்தம் தெரிவித்ததோடு,
இதில் சம்பந்தப்பட்ட காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.