மகனை மோசமான செயலில் ஈடுபடுத்தி வீடியோ எடுத்த இளம்பெண்ணை தேடும் பொலிசார்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
582Shares

பிரேசில் நாட்டில் இளம்பெண் ஒருவர் தன் குழந்தைக்கு கஞ்சா புகைக்க கொடுக்கும் வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக ஊடகங்களில் வேகமாக பரவிய அந்த வீடியோவில், கஞ்சா பிடிக்கும் இளம்பெண் ஒருவர், தன் குழந்தையின் வாயிலும் அந்த கஞ்சா சிகரெட்டை வைப்பதைக் காண முடிகிறது.

முதலில் அந்த குழந்தை புகைக்க மறுக்கவும், அந்த பெண், இழு Guel, இழு என்று கூறி குழந்தையின் உதடுகளை மூட, அந்த குழந்தை புகையை வாய்க்குள் இழுத்து வெளியே ஊதுகிறது.

இன்னும் வேண்டுமா என்று கேட்டு மீண்டும் அந்த குழந்தைக்கு புகைக்க கொடுக்கும் அந்த பெண், பின்னர் தனது மகளுக்கும் புகைக்க கொடுக்க, அந்த பிள்ளை உடனே மறுத்து பின்வாங்கி, பின் சிரிக்கிறாள்.

அந்த இளம்பெண்ணோ, மீண்டும் மீண்டும் அந்த குழந்தைக்கு கஞ்சா புகைக்க கொடுக்கிறார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, பொலிசார் அந்த வீடியோவிலிருப்பவர்களை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.

வீடியோவை காண

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்