குடும்பத்துடன் வடகொரியாவை விட்டு வெளியேறி, வெளிநாட்டில் தஞ்சம் கோர திட்டமிட்ட கிம் ஜாங் உன் மருமகன் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடைசியாக தைவானின் தைபே நகரில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க உளவாளிகளுடன் சந்திப்பில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
வடகொரிய தலைவரின் மருமகனான கிம் ஹான் சோல் தமது தாயார் மற்றும் சகோதரியுடன் நாட்டைவிட்டு வெளியேறி நெதர்லாந்து செல்ல திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
அங்கு அவர் புகலிடம் கோருவதற்காக கிம் ஹான்-சோல் தனது தாய் மற்றும் சகோதரியுடன் ஆம்ஸ்டர்டாமிற்கு தப்பிச் செல்ல விரும்பியுள்ளார்.
இதன் பொருட்டு, தைவான் தலைநகர் தைபே நகரில் சென்றுள்ளார். அங்கே அவர் விமான நிலையத்தில் வைத்து Free Joseon அமைப்பின் ஆர்வலர்களை சந்தித்துள்ளார்.
அந்த அமைப்பானது கிம் ஹான் சோலுடன் மூன்று நாடுகளில் புகலிடம் கோருவது தொடர்பில் விவாதித்ததாகவும்,
இறுதியில் நெதர்லாந்து செல்ல முடிவானதாகவும், தொடர்ந்து ஆம்ஸ்டர்டாம் செல்ல கிம் ஹான் சோல் குடும்பம் தயாரான நிலையில், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அமெரிக்க உளவாளிகள் குழு ஒன்று கிம் ஹான் உடன் சந்திப்பில் ஈடுபட்டதாகவும், அதன் பின்னர் கிம் ஹான் மற்றும் அவரது தாயார், சகோதரி உள்ளிட்ட மூவரையும் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், அமெரிக்க உளவாளிகளால் அவர்கள் கடத்தப்பட்டு, ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கலாம் என அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கிம் ஹான் சோலின் தந்தை கிம் ஜாங் நாம் என்பவரே மலேசிய விமான நிலையத்தில் மர்மமான முறையில் ரசாயன பொடி தூவி கொல்லப்பட்டவர்.
இந்த வழக்கின் விசாரணை மொத்தமாக சீர்குலைக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது மகன் உள்ளிட்ட குடும்பம் அமெரிக்க உளவாளிகளிடம் சிக்கியுள்ளது.