ரஷ்ய அதிபருக்கு ரகசியமாக ஒரு மகள் இருப்பதாகவும், அவரது தாயார் யார் என்பது குறித்தும் எதிர்க்கட்சி ஆதரவு இணையதளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அது என்ன ராசியோ தெரியாது, ரஷ்ய அதிபர் புடினுக்கு வெளியுலகுக்கு தெரியாமல் ஒரு மகள் இருக்கிறார், அது இவர்தான் என்பது போன்ற செய்திகள் அவ்வப்போது வந்துகொண்டே இருக்கும்.
இப்போது, Svetlana Krivonogikh என்ற பெண்ணுடன் ரஷ்ய அதிபர் புடினுக்கு 17 வயதில் ஒரு மகள் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், 2003இல் அந்த குழந்தை பிறந்தபோது, அவருக்கு திருமணம் ஆகி, அவர் தன் மனைவியுடன் வாழ்ந்துவந்ததாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது அந்த தளம்.

அந்த 17 வயது பெண்ணின் படத்தை முகம் காட்டாமல் அந்த தளம் வெளியிட்டுள்ள நிலையில், அவளது தாய் குறித்த விவரங்களும் புகைப்படங்களும் வெளிப்படையாகவே வெளியிடப்பட்டுள்ளன.
தற்போது 45 வயதாகும் Krivonogikh, அதாவது அந்த 17 வயது பெண்ணின் தாய், கவர்ச்சி நிகழ்ச்சிகளுக்கு பேர் போன ஒரு இரவு விடுதி வைத்துள்ளாராம்.

