டிரம்பிடம் இருந்து எப்போது வேண்டுமானாலும் அந்த உத்தரவு வெளியாகலாம்: ராணுவத்தை தயார் நிலையில் நிறுத்தும் நாடு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
1207Shares

ஈரான் மீது அமெரிக்காவின் வான் தாக்குதல் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற ரகசிய தகவல் கசிந்துள்ள நிலையில், தங்கள் ராணுவத்தை தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டுள்ளது இஸ்ரேல்.

ஜனாதிபதி டிரம்பின் ஆட்சி காலத்தில், அவர் போர் தொடர்பில் அக்கறை கொண்டதில்லை என்பது மட்டுமல்ல,

வட கொரியா போன்ற நாடுகளுடன் சுமூகமான உறவை பேண நடவடிக்கை மேற்கொண்டதுடன், பேச்சுவார்த்தைக்கும் தயாரானார்.

இருப்பினும், சீனா, ஈரான் போன்ற நாடுகளுடன் அவரது போக்கு கடுமையாகவே இருந்தது.

தற்போது ஜனாதிபதி தேர்தலில் அவரால் நம்ப முடியாத தோல்வியை எதிர்கொண்ட நிலையில், அவரது நடவடிக்கைகள் இனி கடுமையாகவே இருக்கும் என நிபுணர்களால் கணிக்கப்பட்டது.

மேலும், தேர்தலுக்கு முன்னர் ஈரான் மீது வான் தாக்குதலுக்கு ஜனாதிபதி டிரம்ப் ஆலோசித்து வந்ததாகவும், ஆனால் அவரது அரசியல் ஆலோசகர்களால் அது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், தற்போது காபந்து ஜனாதிபதியாக இருக்கும் டொனால்டு டிரம்ப், தமது ஆட்சியின் இறுதி நாட்களில் ஈரான் மீதான வான் தாக்குதலுக்கு உத்தரவிடலாம் என்ற தகவல் கசிந்துள்ளது.

குறிப்பாக ஈரானின் அணுஆயுத உள்கட்டமைப்பு மீது அமெரிக்கா தாக்குதல் தொடுக்கலாம் என கூறப்படுகிறது.

இதனைக்கருத்தில் கொண்டே தமது ராணுவத்தை தயார் நிலையில் நிறுத்த இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஏற்பாடுகள் அமெரிக்காவின் சாத்தியமான வான் தாக்குதலுடன் மட்டுமல்லாமல், ஈரானில் இருந்து இதனால் ஏற்படக்கூடிய பதிலடிக்கு தொடர்புடையதாகவும் பார்க்கப்படுகிறது.

இதனால், சிரியா, லெபனான் மற்றும் காசா பகுதி முழுவதும் ஈரானால் நிறுத்தப்பட்டுள்ள கூலிப்படைகளின் தாக்குதலுக்கு பதிலளிக்க முடியும் என இஸ்ரேல் திட்டமிடுகிறது.

அமெரிக்காவின் வான் தாக்குதல் தொடர்பில் இதுவரை உளவு அமைப்புகளிடம் இருந்து எந்த தகவலும் கசியாத நிலையில், டிரம்பின் தன்னிச்சையான முடிவாக கூட இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

இதனிடையே, டிரம்ப் ஆட்சியின் இறுதி நாட்களில் ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து இரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக ஊடக செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அது எந்த வகையான இரகசிய நடவடிக்கைகள் என்ற தகவலை அந்த ஊடகம் வெளியிட மறுத்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்