கடும் மூச்சுத்திணறலுடன் மருத்துவமனைக்கு சென்ற நபர்! ஸ்கேனில் காத்திருந்த அதிர்ச்சி: எச்சரிக்கை செய்தி

Report Print Santhan in ஏனைய நாடுகள்
445Shares

ரஷ்யாவில் 59 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மூச்சு விட சிரமப்பட்டதன் காரணமாக, மருத்துவமனைக்கு சென்று சோதித்து பார்த்த போது, அவரது மூக்கில் நாணயம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

ரஷ்யாவை சேர்ந்த 59 வயது மதிக்கத்தக்க பெயர் குறிப்பிட விரும்பாத நபர் சமீபத்தில், தனது மூக்கின் வலது நாசியில் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டதன் காரணமாக, அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு ஸ்கேன் செய்து பார்த்த போது, அவரது மூக்கில் ஏதோ பொருள் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அதன் பின் அது நாணயம் என்பதை அறிந்துள்ளார்.

(Picture: Moscow Department of Health)

இவர் தன்னுடைய 6 வயதில் மூக்கில் நாணயத்தை வைத்து விளையாடிய போது, எதிர்பார்தவிதமாக அந்த நாணயம் மூக்கில் சிக்கிக் கொண்டுள்ளது.

அவருடைய தாயார் மிகவும் கண்டிப்புடன் இருப்பார் என்பதால், இதைப் பற்றி அவரிடம் கூற பயந்துள்ளார். அதன் பின் இதை முற்றிலும் மறந்துள்ளார்.

தற்போது ஐம்பது ஆண்டுகளுக்கு பின் அந்த நாணயம் ஸ்கேன் பரிசோதனை மூலம் இருப்பது ஞாபகம் வந்துள்ளது. இதையடுத்து மருத்துவர்கள் எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சையை மேற்கொண்டு நாணயத்தை வெளியில் எடுத்தனர்.

கடந்த வெள்ளிக் கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், தற்போது மூச்சுத் திணறால் இல்லாமல் டிஸ்சாஜ் செய்யப்பட்டதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

(Picture: Moscow Department of Health)

மேலும் அவரது மூக்கில் இருந்து எடுக்கப்பட்ட நாணயத்தைச் சுற்றி கற்கள் இருந்துள்ளன. அந்த நாணயம், ரஷ்யா சோவியத் ஒன்றியமாக இருந்த போது பயன்படுத்தப்பட்ட நாணயம்.

1991-ஆம் ஆண்டுக்கு பிறகு சோவித் ஒன்றியத்தின் சரிவுக்கு பிறகு அந்த நாணயம் நிறுத்தப்பட்டது. இது போன்று சிறுவயதில் ஏதேனும் தெரியாமல் தங்கள் உடல்களில் பொருட்கள் இருந்தால், அதை ஞாபகப்படுத்தி சரி செய்து கொள்வது நல்லது, இல்லையெனில் அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று எச்சரிக்கப்படுகிறது.

(Picture: Moscow Department of Health)

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்