110 விவசாயிகளை கழுத்தை நெரித்தும், சுட்டும் கொடூரமாக கொலை செய்த பயங்கரம்! தீவிரவாதிகள் வெறிச் செயல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

நைஜீரியாவில் விவசாயிகளுடன் ஏற்பட்ட மோதலில், பயங்கரவாதிகள் 110 விவாசயிகளை துப்பாக்கியால் சுட்டும், கழுத்தை அறுத்தும் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் ஐ.எஸ்.அமைப்பினை நிறுவுவதற்கு போகோ ஹரம் பயங்கரவாதிகள் முயற்சித்து வருகின்றனர்.

ஏனெனில், கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் நைஜீரியாவில், போகோ ஹரம் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நாட்டின் தலைநகர் மைடுகுரியில் உள்ள கோசிப் என்ற கிராமத்தில் பண்ணை நிலங்களில் விவசாயிகள் பலர் வேலையில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.

அவர்களிடம் நெருங்கி வந்த ஒருவன் உணவு தரும்படி கேட்டுள்ளான். அவனை விவசாயிகள் சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்துள்ளனர்.

இதில் ஏற்பட்ட தகராறில் பயங்கரவாதிகள் கும்பலாக வந்து துப்பாக்கியால் சுட்டும், கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர முறையில் கொலை செய்துள்ளனர்.

இதில் 110 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டும், பலர் படுகாயமும் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை ஐ.நா. அமைப்பின் குடியிருப்பு மற்றும் மனிதநேய ஒருங்கிணைப்பாளர் எட்வர்டு கால்லன் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்