ஈரானின் அணுசக்தி விஞ்ஞானி படுகொலை விவகாரத்தில் தாக்குதல்களை ஈரான் அடையாளம் கண்டுள்ளது, அத்துடன் கொலையில் ஈடுபட்டவர்கள் இவர்கள் தான் என நான்கு பேரின் புகைப்படங்களையும் ஈரான் வெளியிட்டுள்ளது.
ஈரானின் துணை ராணுவ அமைப்பான இஸ்லாமிய புரட்சிகர காவல்படையில் (ஐ.ஆர்.ஜி.சி) பிரிகேடியர் ஜெனரலாக இருந்தவர் அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே.
இவர் தான் ஈரான் நாட்டின் அணு ஆயுத திட்டத்தை முன்னெடுத்து செயல்படுத்தி வருவதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் குற்றம்சாட்டி வந்தன. ஆனால் இதனை ஈரான் ஆரம்பம் முதலே திட்டவட்டமாக மறுத்து வந்தது.
இந்த நிலையில் ஈரான் தலைநகர் தெஹ்ரானின் கிழக்கு புறநகரான அப்சார்ட் என்ற பகுதியின் வழியாக மொஹ்சென் ஃபக்ரிசாதே, அவரது மனைவி ஆகியோர் காரில் பயணித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது துல்லியமாக திட்டமிட்டு, 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஃபக்ரிசாதேவின் காரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனா்.
இதில் ஃபக்ரிசாதே மற்றும அவரது மனைவி ஆகியோர் கொல்லப்பட்டனர். 3 நிமிடத்தில் நடந்து முடிந்த படுகொலை சம்பவத்தால் ஈரான் முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. இந்தத் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஈரான் குற்றம்சாட்டி வருகிறது.
இஸ்ரேலியர்களுக்கு அமெரிக்காவின் உதவி வழங்கப்பட்டிருக்கலாம் என்று ஈரான் அதிகாரிகள் நம்புகின்றனர்.
இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் ஃபக்ரிசாதே படுகொலையில் ஈடுபட்டதாக உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஈரானிய நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் மொஹமத் அஹ்வாஸ், நான்கு நபர்களின் புகைப்படங்களை ட்வீட் செய்துள்ளார்,
இவர்கள் தான் விஞ்ஞானி ஃபக்ரிசாதேவை படுகொலை செய்திருப்பதாகவும் ஈரானிய அதிகாரிகள் நம்புவதாகவும் கூறியுள்ளார்.
ஈரானில் உள்ள பல்வேறு ஹொட்டல் மற்றும் உணவகங்களில் நான்கு பேரின் புகைப்படங்களை ஈரானிய அதிகாரிகள் பரபரப்பாக விநியோகித்து வருவதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் குறித்து தகவல் கேட்கிறார்கள் என்றும் அஹ்வாஸ் தெரிவித்துள்ளார்.
அஹ்வாஸின் டுவிட்டர் பதிவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், ஈரானில் உள்ள அரசுக்கு சொந்தமான FARS செய்தி நிறுவனத்தின் அறிக்கை, நாட்டின் புலனாய்வு அமைச்சகம் படுகொலை செய்யப்பட்டவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை என்று அஹ்வாஸ் தனது டுவிட்டரில் 60 க்கும் மேற்பட்ட புலனாய்வுப் பிரிவினர் ஃபக்ரிசாதேவின் கொலையில் ஈடுபட்டதாகக் கூறியிருந்தார்.
அவரது ட்வீட்டை ஏராளமான இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன. இருப்பினும், இஸ்ரேலிய அரசு இதுவரை இதுபற்றி கருத்து தெரிவிக்கவில்லை.