எகிப்திய மருத்துவமனை ஒன்றில் கொரோனா தொற்றாத ஒரு சூப்பர் செவிலியர்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

எகிப்திய மருத்துவமனை ஒன்றில் கொரோனா தொற்றாத ஒரு சூப்பர் செவிலியர் கொரோனா நோயாளிகளை கவனித்துக்கொள்வதற்காகவே பணிக்கமர்த்தப்பட்டுள்ளார். அவரது பெயர் Cira-03...

ஆம், எகிப்திய இளம் பொறியாளர் ஒருவர் உருவாக்கியுள்ள ரோபோதான் இந்த Cira-03. நோயாளியின் முகவாய்க்கட்டையை மென்மையாகப் பிடித்துக்கொண்டு அவர்களிடமிருந்து Cira, மாதிரி ஒன்றை சேகரிக்கும் அழகே அழகு.

Ciraவால் நோயாளியிடமிருந்து இரத்த மாதிரி சேகரிக்க முடியும், EKG மற்றும் எக்ஸ் ரே எடுக்க முடியும். அது மட்டுமல்ல, ஆங்கிலப் படங்களில் வருவதுபோல, தன் மார்பிலேயே பரிசோதனை முடிவுகளை காட்டவும் முடியும்.

அத்துடன், மனித முகம் போன்ற முகமும், கைகளும் கொண்ட Cira, அன்பாக, மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள் என்று கூறும்போது, யாராவது மறுப்பார்களா என்ன? Ciraவை உருவாக்கியவர் Mahmoud el-Komy என்ற இளம் பொறியாளர்.

பொதுவாக மக்களுக்கு ரோபோக்கள் என்றால் ஒருவித பயம் இருக்கும், ஆனால், Cira மனித முகம் கொண்டவராக இருப்பதால், நோயாளிகள் செவிலியர்களைவிட Ciraவை விரும்புவதாக தெரிவிக்கிறார்.

Cira தற்போது எகிப்திலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில்தான் பணியாற்றுகிறார். Ciraவுக்கு எகிப்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இதேபோல் பல Ciraக்களை உருவாக்கும் எண்ணத்தில் இருக்கிறார் Mahmoud el-Komy.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்