விமானத்தில் டிவியை பார்க்கவிடாமல் மறைத்த பெண் பயணி! ஆத்திரத்தில் அந்த நபர் செய்த மோசமான செயலின் வீடியோ காட்சி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பயணிகள் விமானம் ஒன்றில் பெண் பயணியின் முடியில் சுவிங்கத்தை வைத்து தேய்த்த வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமூகவலைத்தளமான டிக் டாக்கில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பயணிகள் விமானத்தில் முன் இருக்கையில் இருக்கும் பெண் ஒருவர், பின் இருக்கையில் இருக்கும் பயணியின் டிவியை தன்னுடைய முடியால் மறைத்து விடுகிறார்

இதனால் கடும் கோபமடைந்த பின் இருக்கையில் இருந்த பயணி, அந்த பயணியின் முடிகளில், சுவிங்கத்தை முழுவதுமாக தேய்த்துவிடுகிறார்.

இந்த காட்சியை அங்கிருக்கும் நபர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவைக் கண்ட இணையவாசிகளில் பலர் இது ஒரு மோசமான செயல் என்று குறிப்பிட்டு வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் அது அவரது நண்பராகவே இருக்க முடியும் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

இருப்பினும் இந்த சம்பவம் எங்கு நடந்தது? எப்போது நடந்தது என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்