அணுகுண்டு வெடிப்பில் இருந்து தப்பி... விமானங்களை தாக்கும் போர் இயந்திரம்! ரஷ்யா வெளியிட்ட திகிலூட்டும் வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்
1670Shares

அணுகுண்டு வெடிப்பில் இருந்து தப்பித்து விமானங்களை தாக்கக்கூடிய திகிலுட்டும் வீடியோவை ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

உலகின் ஒவ்வொரு நாடுகளும், தங்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்தை, பலப்படுத்தி வருகின்றன. அதில் குறிப்பாக ஒரு சில நாடுகளில் இராணுவத்திற்கு என்றே ஒரு பெரும் தொகையை ஒதுக்கி வருகின்றன.

இதன் காரணமாக அந்த நாடுகள் இராணுவத்தில் திறமை வாய்ந்தவையாக இருக்கும்.

அந்த வகையில், ரஷ்யா அவ்வப்போது தன்னுடைய இராணுவ பலத்தை காட்டி வருகிறது. அந்த வகையில், அணு குண்டுவெடிப்பில் இருந்து தப்பித்து விமானங்களை சுடக்கூடிய டெர்மினட்டர் டேங்களின் வீடியோவை ரஷ்யா வெளிட்டுள்ளது.

வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்....

ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம், நேற்று போர் இயந்திரத்திரத்தின் வியத்தகு காட்சி, டெர்மினேட்டர் என்று புனைப்பெயரால் அழைக்கப்படும் அந்த போர் இயந்திரம் கடந்த 2013-ஆம் ஆண்டு அதிநவீன BMPT-72 என்று வெளியிட்டப்பட்டது.

இந்த போர் இயந்திரம் தான் கடந்த 2017-ஆம் ஆண்டு சிரியாவில் நடந்த போரில் பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது அதன் சக்தியை காட்டும் வகையில் இந்த வீடியோ உள்ளது. இந்த டெர்மினேட்ட டேங் போர் இயந்திரம், இலக்குகளை நோக்கி தொடர்ந்து ஏவுகணைகளை வீசுகிறது.

இது, ஹெலிகாப்டர்கள் மற்றும் குறைந்த அளவு பறக்கும் விமானங்களைத் தாக்கும் திறன் கொண்டவை. இது.

நான்கு ஏவுகணை ஏவுகணைகள், இரண்டு ஆட்டோ பீரங்கிகள், இரண்டு வேகமாக சுடும் கைக்குண்டு ஏவுகணைகள் மற்றும் ஒரு இயந்திர துப்பாக்கிகளை உள்ளடக்கியது.

உலகளாவிய அணுசக்தி யுத்தத்தின் போது குண்டுவெடிப்புக்குப் பிறகும், கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்போடு போராடக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதியாக நான்காவது முறையாக விளாடிமிர் புடினின் பதவியேற்பைக் குறிக்கும் வகையில் 2018-ஆம் ஆண்டில் டெர்மினேட்டர்களின் சக்தியைக் காட்டும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டது.

இந்த டெர்மினேட்டர் ரஷ்ய இராணுவம் மற்றும் பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்