200 ரூபாய்க்கு குத்தகைக்கு எடுத்த நிலத்தால் ஒரே நாளில் லட்சாதிபதியான விவசாயி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
340Shares

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் மாதத்துக்கு ரூ.200 என்று பேசி குத்தகை எடுத்த நிலத்தை விவசாயம் செய்ய தோண்டிய போது அதில் வைரக் கல் கிடைத்ததால், விவசாயி தற்போது லட்சாதிபதியாகியுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், 45 வயதாகும் லகான் யாதவ், 10க்கு 10 அடி பரப்பு கொண்ட இடத்தை மாதத்துக்கு ரூ.200க்கு குத்தகைக்கு எடுத்தார்.

அதனை தோண்டியபோது, அதில் 14.94 காரட் வைரக் கல் இருந்தது தெரிய வந்தது. அதனை கடந்த சனிக்கிழமை ரூ.60 லட்சத்துக்கு ஏலம் விட்டுள்ளார்.

தனக்குக் கிடைத்தத் தொகையை தனது நான்கு குழந்தைகளின் எதிர்காலத்துக்காக அப்படியே வங்கியில் முதலீடு செய்யவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போபாலுக்கு அருகே பன்னா என்ற பகுதியில் இந்த தீபாவளிக்குப் பின், சுமார் 4 விவசாயிகளுக்கு இதுபோல தங்களது விவசாய நிலத்தில் வைரக் கற்கள் கிடைத்துள்ளன. அனைத்தும் சுமார் ரூ.1.5 கோடிக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்