கண்ணீருடன் கதறும் பெற்றோர்... துப்பாக்கி முனையில் கடத்தல்: நூற்றுக்கணக்கான மாணவர்கள் நிலை என்ன?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
393Shares

நைஜீரியா நாட்டில் பாடசாலை ஒன்றில் இருந்து துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவர்களை மீட்டுத்தர வலியுறுத்தி அவர்களின் பெற்றோர் அரசாங்கத்தை நாடியுள்ளனர்.

நைஜீரியாவின் வடமேற்கு கட்சினா பகுதியில் அமைந்துள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்றில் இருந்தே மாணவர்கள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளனர்.

அரசு உதவி பெறும் ஆண்களுக்கான இந்த பாடசாலையில் இருந்தே 321 மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் மாகாணம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மீட்பு நடவடிக்கையில் தற்போது ராணுவமும் உளவுத்துறையும் களமிறக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் கடத்தப்பட்டது தெரிய வந்ததை அடுத்து, பெற்றோர்கள் கண்ணீருடன் அந்த பாடசாலையில் திரண்டுள்ளனர்.

கண்டிப்பாக கடவுள் எவ்வித ஆபத்தும் இன்றி, மாணவர்களை திரும்ப ஒப்படைக்க வழி செய்வார் என்றே பல பெற்றோர்களும் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கடத்தல் சம்பவத்தின்போது, துப்பாக்கிதாரிகளிடம் இருந்து தப்பிய 17 வயது மாணவன் யஹாயா, அதிகாரிகளிடம் முக்கிய தகவல்களை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

மாணவர்களை துன்புறுத்த வேண்டாம் எனவும், காட்டுக்குள் பல இடங்களில் அவர்களை கொண்டு சென்றதாகவும் மாணவன் தெரிவித்துள்ளான்.

கடத்தப்பட்ட மாணவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பது மட்டுமின்றி,

இதுவரை எந்த அமைப்பும் கோரிக்கை எதையும் முன்வைத்து அறிக்கையும் வெளியிடவில்லை என்றே கூறப்படுகிறது.

கடந்த மாதம், இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் குழு ஒன்று வடகிழக்கு போர்னோவில் ஏராளமான விவசாயிகளைக் கொன்றதுடன், அவர்களில் சிலரைத் தலை துண்டித்த சம்பவமும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்