தடுப்பூசிக்கு எதிர்ப்பா? கொரோனா சிகிச்சைக்கான மொத்த கட்டணத்தையும் திருப்பி கேட்கும் நாடு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
179Shares

இத்தாலியின் மத்தியில் இருக்கும் குட்டி நாடு ஒன்று தடுப்பூசி எதிர்ப்பாளர்களுக்கு பேரிடியாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

குட்டி நாடான சான் மரினோவில் அங்குள்ள நிர்வாகம் மொத்த மக்களுக்கும் தடுப்பூசியை இலவசமாக வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

பொதுவாக சான் மரினோ என்ற குட்டி நாட்டில் அனைவருக்கும் மருத்துவ சேவை இலவசமாகவே வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் தற்போது உலகின் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான ஒரு மன நிலை உருவாகி வருகிறது.

இந்த நிலையில், அவ்வாறான மன நிலை கொண்டவர்கள் சான் மரினோ நாட்டில் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என அங்குள்ள நிர்வாகம் எச்சரித்துள்ளது.

தடுப்பூசி எடுத்துக்கொள்ள மறுக்கும் எவரும், கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளானால், சிகிச்சைக்கான மொத்த கட்டணத்தையும் அவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என அங்குள்ள நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆனால் குறிப்பிட்ட சில மருத்துவ காரணங்களுக்காக, கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள முடியாதவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மொத்த இத்தாலியும் ஊரடங்கால் முடங்கியபோதும், சான் மரினோவில் மட்டும் எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.

மட்டுமின்றி தற்போதும், அங்கு கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாமல் விழாக்களும் கொண்டாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டே வருகிறது.

ஆனால் மொத்த மக்களையும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளவே சான் மரினோ நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.

தடுப்பூசி எதிர்ப்பாளர்களிடம் இருந்து சிகிச்சைக்கான கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை சான் மரினோவின் மாநில செயலாளர் ராபர்டோ சியாவட்டா முன்மொழிந்துள்ளார்.

ஆனால், சியாவட்டாவின் திட்டத்திற்கு நாட்டின் இரு அவைகளிடம் இருந்து இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்