தாய்லாந்தில் சந்தப்பூரி எனும் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஒரு யானைக்குட்டி வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளில் மோதியது. அந்த குட்டி யானை சம்பவ இடத்திலேயே, இதயம் செயலிழந்து சாலையில் விழுந்தது.
இந்த விபத்தில், பைக் ஓட்டுநர் உட்பட அங்கு வந்த யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
சம்பவம் நடந்த சற்று நேரத்தில், 26 ஆண்டுகளாக மீட்புப் பணியாளராக இருந்துவரும் மனா ஸ்ரீவேட் என்பவர் தன் சொந்த வேலையாக சென்றுகொண்டிருக்கும் அப்பகுதியைக் கடந்துள்ளார்.
தனது வாழ்க்கையில் பல மனிதர்களுக்கு புத்துயிர் முயற்சிகளை மேற்கொண்டுள்ள அவர், முதல் முறையாக, ஒரு யானை குட்டி மீது CPR (cardiopulmonary resuscitation) முயற்சியை செய்துள்ளார்.
தனது இரண்டு கைகளால் யானை குட்டியின் இதயத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். 10 நிமிடங்களுக்குப் பிறகு யானைக்கு மீண்டும் உயிர் வந்துள்ளது.
இந்த வீடியோ ஒன்லைனில் மிகவும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சாலையின் நடுவில் மூச்சின்றி கிடக்கும் யானை குட்டியின் பக்கவாட்டில் மனா, தனது இரண்டு கைகளைக் கொண்டு CPR கொடுப்பதைக் காணமுடிகிறது.
"உயிரைக் காப்பாற்றுவது என் உள்ளுணர்வு, ஆனால் நான் கவலைப்பட்டேன், ஏனென்றால் தாயும் பிற யானைகளும் தன் குழந்தையை அழைப்பதை நான் கேட்டேன்" என்று மனா கூறினார்.
மேலும், "ஒன்லைனில் நான் பார்த்த வீடியோ கிளிப்பின் அடிப்படையில் யானையின் இதயம் எங்கே இருக்கும் என்று யூகித்து இந்த முயற்சியை செய்தேன், குழந்தை யானை நகரத் தொடங்கியபோது, நான் கிட்டத்தட்ட கண்கலங்கிவிட்டேன்" என்று அவர் கூறினார்.
பத்து நிமிடங்கள் கழித்து, மீண்டும் உயிர் பெற்ற யானை குட்டி, சிறிய சிகிச்சைக்காக வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, சற்று நேரத்தில் விபத்து நடந்த பகுதிக்கே மீண்டும் கொண்டுவரப்பட்டது.
அப்பொது, இந்த குழந்தை யானை அழைப்பதைக் கேட்டு தாய் யானையும் அதனுடன் மற்ற யானைகளும் அங்கு வந்ததாககே கூறப்படுகிறது.
cardiopulmonary resuscitation மூலம் இந்த குட்டி யானை மீண்டும் உயிர்பெற்றது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.