வெளிநாட்டில் பல்வேறு மோசடி செயல்களில் ஈடுபட்ட 42 வயது இந்திய பெண்! நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
92Shares

சிங்கப்பூரில் மோசடி செயல்களில் ஈடுபட்ட இந்திய பெண்ணுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கவீனா ஜெயகுமார் என்ற 42 வயதான பெண் விமான டிக்கெட்டுகள் வாங்கித் தருவது உட்பட, பல மோசடிகளை செய்துள்ளார்.

இது தொடர்பாக அவரை பொலிசார் கைது செய்தனர்.

கவீனா ஜெயகுமார் பலரிடம், 3.32 கோடி ரூபாய் மோசடி செய்திருக்கிறார் என விசாரணையில் தெரியவந்தது.

அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் கவீனா ஜெயகுமார் வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

அதன்படி அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்