அம்மாவுக்கு பயந்து, 50 ஆண்டுகளாக மூக்கில் மாட்டிகொண்ட பொருளை பற்றி சொல்லாமால் இருந்த மனிதர்! ரஷ்யாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Gokulan Gokulan in ஏனைய நாடுகள்
421Shares

59 வயதான பெயரிடப்படாத ரஷ்ய நபர், தனது 6 வயதில் விளையாடிக்கொண்டிருக்கும்போது ஒரு சிறிய பொருள் அவரது வலது நாசிக்குள் மாட்டிக்கொண்டுள்ளது. அவர் தனது 'கண்டிப்பான' அம்மாவிடம் இதைப் பற்றி சொல்ல மிகவும் பயந்துள்ளார். பிறகு, அப்படி ஒன்று நடந்ததையே அவர் மறந்துள்ளார்.

அந்த மனிதர் அடுத்த ஐம்பது ஆண்டுகளாக எந்த இடையூறும் இல்லாமல் வாழ்ந்துள்ளார்.

சமீபத்தில் தனது வலது நாசியில் மூச்சு விட முடியவில்லை என்பது தெரிந்தவுடன், அவர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது.

அப்போது தான், அவரது நாசிப் பாதையில் எதிர்பாராத பொருளை மருத்துவர்கள் கண்டுள்ளனர். ஒரு துருப்பிடித்த பழைய நாணயம் ஒன்று உள்ளே இருப்பது தெரியவந்தது. மேலும் Rhinoliths எனப்படும் கற்கள் அந்த நாணயத்தைச் சுற்றி உருவாகி, அவரது சுவாசிக்கும் திறனைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தது.

பிறகு, மருத்துவர்கள் பொது மயக்க மருந்தின் கீழ் எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சையை மேற்கொண்டு, 53 ஆண்டுகளுக்குப் பிறகு Soviet one kopek நாணயத்தை அவரது மூக்கிலிருந்து மீட்டெடுத்தனர்.

இந்த நாணயம் 1991-ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் சரிவுக்குப் பிறகு ரஷ்யாவில் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட்டது. வெளியே எடுக்கப்பட்ட அந்த நாணயத்தில் சுத்தியல் மற்றும் அரிவாள் சின்னம் காணப்படவில்லை.

சிகிசைக்குப் பிறகு அவர் இப்பொது எந்த தடையுமின்று நன்றாக சுவாசித்துவருகிறார்.

இப்படி, இவர் தான் பல ஆண்டுகளாக ஒரு அந்நிய பொருளை நாசிக்குள் அடக்கி வைத்துள்ளார் என்ரூ பார்த்தால், ஏற்கெனவே 2015-ஆம் ஆண்டில், சர்ரேவைச் சேர்ந்த 51 வயதான ஸ்டீவ் ஈஸ்டன் ஒரு தும்மலின்போது ஒரு சிறிய பொம்மையின் நுனி (Dart) அவரது மூக்கிலிருந்து வெளியேறியது.

அவர் அதை ஏழு வயதில் முடுக்கினுள் அடைந்துள்ளது. அந்த நேரத்தில் அவரது பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், ஆனால் மருத்துவர்களால் அதை அகற்ற முடியவில்லை.

ஈஸ்டன் அடிக்கடி தலைவலி மற்றும் மூச்சுத்திணறல்களுக்கு ஆளான அவர், மருத்துவமனைக்கு சென்றபோது இதனைத் கண்டறிந்துள்ளார். 44 ஆண்டுகளாக டார்ட் அவரது மூக்கில் சிக்கியிருப்பது தனக்கு முற்றிலும் தெரியாது என்று அவர் கூறினார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்