ரஷ்யாவில் இன்று காலை உறையவைக்கும் குளிரில், கடலில் மீனவர்களின் படகு ஒன்று மூழ்கியது.
உள்ளூர் நேரப்படி, இன்று காலை 7 மணியளவில், அந்த படகின் அடிப்பகுதியில் பனி
உறைந்ததையடுத்து, படகின் எடை அதிகரித்து அந்த படகு கடலில் மூழ்கியுள்ளது. அந்த பகுதி ஆர்டிக் பகுதி என்பதால், தண்ணீரின் வெப்பநிலை -30 டிகிரி செல்ஷியஸாக இருந்துள்ளது.
அந்த படகில் 19 பேர் இருந்த நிலையில், 17 பேர் உயிரிழந்திருக்கலாம் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
அதே படகில் இருந்த இரண்டுபேர் மட்டும் உயிரிழந்த ஒருவரின் உடலை பிடித்துக்கொண்டு அலைகளால் அடித்து வரப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களைக் கண்ட மற்றொரு படகு, அந்த இருவரையும் உயிருடன் மீட்டுள்ளது. காணாமல் போன மற்ற மீனவர்களை தேடும் பணி தொடர்கிறது.