வுஹான் கொரோனா பரவல் குறித்த உண்மையை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியதாக பாராட்டப்பட்ட பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் Zhang Zhan (37) என்ற பெண் பத்திரிகையாளர் கொரோனா பரவல் குறித்த உண்மையை வெளியிட்டதற்காக, குழப்பத்தைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
இவ்வாறு விசாரணைக்குட்படுத்தப்படும் முதல் நபரான Ms Zhangக்கு விசாரணைக்குப்பின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.
Zhang தனக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருப்பதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இதேபோல், சீனாவில் கொரோனா பரவல் குறித்து தனிப்பட்ட முறையில் செய்திகளை வெளியிட்ட பலரும் மாயமாகியுள்ள நிலையில், முதல் நபராக Zhang விசாரணைக்குட்படுத்தப்பட்டு அவருக்கு தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.