வைரஸ்களை ஆயுதமாக பயன்படுத்த ரஷ்யா திட்டம்: ஆய்வு குறித்த அதிரவைக்கும் தகவல் வெளியானதால் அச்சம்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
249Shares

ஏற்கனவே உலகம் கொரோனா வைரஸுடன் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், மேலும் சில வைரஸ்களை ஆயுதமாக பயன்படுத்துவது எப்படி என ரஷ்யா ஆய்வு செய்து வருவதாக வெளியான தகவல் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Salisbury என்ற இடத்தில் முன்னாள் உளவாளிகள் இருவருக்கு கொடுக்கப்பட்ட Novichok என்ற நச்சுப்பொருளுடன் தொடர்புடைய ரஷ்யாவின் உளவு நிறுவனம், Toledo என்ற சங்கேத வார்த்தையுடன் ஒரு திட்டத்தை துவக்கியுள்ளதாம். பயங்கர வைரஸான எபோலா மற்றும் அதைவிட கொடிய வைரஸான Marburg என்னும் வைரஸ்களை அந்த நிறுவனம் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இரண்டு வைரஸ்களுமே பயங்கர கொள்ளை நோயை ஏற்படுத்தக்கூடியவை, மனித உடலில் உள்ளுறுப்புக்களை செயலிழக்கச் செய்வதுடன், அவை உடலுக்குள் பயங்கர ரத்தக் கசிவையும் ஏற்படுத்தக்கூடியவையாகும்.

ரஷ்யா ஆய்வு செய்வதாக கூறினாலும், உண்மையில், அது இந்த கொடிய வைரஸ்களை எப்படி ஆயுதமாக பயன்படுத்த முடியும் என்பது குறித்து ஆய்வு செய்துவருவதாக முன்னாள் பிரித்தானிய இராணுவ உளவுத்துறையைச் சேர்ந்த ஒருவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் இந்த திட்டத்துக்கு வைக்கப்பட்டுள்ள ரகசிய குறியீட்டு வார்த்தை Toledo. Toledo என்பது ஸ்பெயின் நாட்டிலுள்ள ஒரு நகரம். அந்நகரம், கொள்ளை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு நகரம்.

மேலும், Ohioவிலும் Toledo என்ற ஒரு நகரம் உள்ளது. அந்த நகரமும் ப்ளூ பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்