இனி கருவை கலைக்கலாம்! பிரபல நாட்டில் அமுலுக்கு வந்த வரலாற்று சிறப்புமிக்க சட்டம்: ஆயிரக்கணக்கான பெண்கள் கொண்டாட்டம்

Report Print Basu in ஏனைய நாடுகள்
293Shares

லத்தீன் அமெரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான அர்ஜென்டினா, கர்ப்பத்தின் 14 வது வாரம் வரை கருக்கலைப்புகளை சட்டப்பூர்வமாக்கியுள்ளது.

லத்தீன் அமெரிக்காவில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடு அர்ஜென்டினா என்பது குறிப்பிடத்தக்கது.

கருக்கலைப்பு மசோதாவுக்கு இந்த மாத தொடக்கத்தில் the Chamber of Deputies ஒப்புதல் அளித்தது.

இதனையடுத்து, அர்ஜென்டினா செனட்டில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது 38 பேர் ஆதரவாகவும், 29 பேர் எதிராகவும் வாக்களித்தனர். ஒருவர் வாக்களிக்கவில்லை.

செனட்டில் இடம்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வாக்கெடுப்புக்குப் பிறகு கருக்கலைப்புகளை சட்டப்பூர்வமாக்க அர்ஜென்டினா ஒப்புதல் அளித்துள்ளது.

இப்போது வரை, அர்ஜென்டினாவில் கற்பழிப்பு வழக்குகளில் அல்லது தாயின் உடல்நிலை ஆபத்தில் இருக்கும்போது மட்டுமே கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்பட்டது.

இந்த மசோதாவை ஆதரித்த ஜனாதிபதி ஆல்பர்டோ பெர்னாண்டஸ், சட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவது தனது பிரச்சார வாக்குறுதிகளில் ஒன்று என உறுதியளித்திருந்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது.

வாக்கெடுப்பின் முடிவு வாசிக்கப்பட்டபோது, தலைநகர் ப்யூனோஸ் அயர்ஸில் உள்ள செனட் கட்டிடத்திற்கு வெளியே கூடிய ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் மக்கள் இதை வரவேற்கும் வகையில் கூச்சலிட்ட படி பச்சைக் கொடிகளை அசைத்தனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்