ஏடன் விமான நிலையத்தை உலுக்கிய பயங்கர தாக்குதல்! தெறித்து ஓடிய மக்கள்: நேரலையில் சிக்கிய பரபரப்பு காட்சி

Report Print Basu in ஏனைய நாடுகள்
282Shares

ஏமன் நாட்டில் உள்ள ஏடன் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டதாகவும் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

சவுதி அரேபியாவிலிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஏமன் அரசாங்க அமைச்சர்கள் வந்த விமானம், ஏடனில் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே இந்த தாக்குதல் நடந்துள்ளது.

அமைச்சர்கள் விமானத்திலிருந்து இறங்கிக்கொண்டிருந்த போது திடீரென வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனினும், பிரதமர் Maeen Abdulmalik மற்றும் ஏமனுக்கான சவுதி தூதர் Mohammed Said al-Jaber உட்பட அமைச்சரவை உறுப்பினர்கள் பாதுகாப்பாக நகரின் ஜனாதிபதி மாளிகைக்கு மாற்றப்பட்டதாக ஊடகங்கள் தகவல் தெரிவித்தன.

குண்டுவெடிப்புக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. எனினும், ஹவுத்தி ஏவுகணைகள் தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்