ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் முதலிடத்திலிருந்து ஓரங்கட்டப்பட்ட அம்பானி! சைலண்டாக சாதித்த அந்த நபர் இவர் தான்

Report Print Basu in ஏனைய நாடுகள்
721Shares

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ஆசியாவின் மிகப் பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்த்தை இழந்தார்.

தடுப்பூசி அதிபரும், சீனாவின் மிகப்பெரிய பாட்டில் தண்ணீர் நிறுவனமான Nongfu Spring நிறுவனருமான Zhong Shanshan, ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

Bloomberg வெளியிட்ட பணகாரர்கள் பட்டியிலின் படி, Zhong-ன் நிகர சொத்து மதிப்பு இந்த ஆண்டு 70.9 பில்லியன் டொலர்கள் உயர்ந்து 77.8 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி, உலகின் பணக்காரர் பட்டியிலில் சீன தொழிலதிபர் Zhong Shanshan 11வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

‘Lone Wolf’ என்று பிரபலமாக அழைக்கப்படும் 66 வயதான Zhong, தனது சொந்தத் தொழிலைத் தொடங்குவதற்கு முன்பு கட்டுமானத் தொழிலாளி, செய்தித்தாள் நிருபர், மருந்து தயாரிப்பாளர் மற்றும் பான விற்பனை முகவராக பணியாற்றினார்.

Hangzhou-வில் பிறந்த Zhong, சீனாவில் பெரும் பாட்டாளி வர்க்க கலாச்சாரப் புரட்சியின் போது ஆரம்பப் பள்ளியை விட்டு வெளியேறினார்.

ஏப்ரல் 2020ல், Zhong கட்டுப்பாட்டில் உள்ள Beijing Wantai Biological Pharmacy நிறுனம், ஷாங்காய் பங்குச் சந்தையில் பொதுவில் சென்றது.

நிறுவனத்தில் அவரது கட்டுப்பாட்டு பங்கு ஆகஸ்ட் மாதத்திற்குள் ஒட்டுமொத்தமாக 20 பில்லியன் டொலராக உயர்ந்தது.

மேலும், இந்த ஆண்டு செப்டம்பரில் ஹாங்காங் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டபோது, ​​Nongfu Spring பங்குகள் உச்சத்தை தொட்டன.

Bloomberg-ன் உலக பணகாரர்கள் பட்டியிலில் நான்காவது இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி, 12 வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

அவரின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு 76.9 பில்லியன் டொலர் (சுமார் 5.63 லட்சம் கோடி ரூபாய்) ஆகும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 90 பில்லியன் டொல்ர்களாக (சுமார் 6.62 லட்சம் கோடி ரூபாய்) இருந்த நிலையில், தற்போது பெரும் சரிவை சந்தித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்