சுலைமானி கொலை... இந்த உலகில் அவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது: எச்சரிக்கும் ஈரான்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
579Shares

ஈரானின் புரட்சி படைத் தளபதி காசிம் சுலைமானியை கொலை செய்தவர்கள் உலகில் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள் என்று அந்த நாடு எச்சரித்துள்ளது.

காசிம் சுலைமானி அமெரிக்கப் படையால் கொல்லப்பட்ட ஒருவருடம் கடந்த நிலையில் அவருக்கு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் ஈரான் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் ஈரான் தலைமை நீதிபதி இம்ராஹிம் ரைசி பேசுகையில், சுலைமானியை கொலை செய்தவர்கள் உலகில் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள்.

அவர்கள் பெரும் பழிவாங்கலுக்கு சாட்சியாக இருக்கப் போகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 3-ம் திகதி பாக்தாத்தில் ஈரானின் குவாட்ஸ் படையின் தளபதி குவாசிம் சுலைமானி, துணைத் தளபதி அபு மெஹதி முஹென்திஸ் உள்ளிட்டவர்கள் அமெரிக்காவின் ஆள் இல்லா ராணுவ விமானம் மூலம் குண்டுவீசி கொல்லப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் பழிக்குப் பழி வாங்குவோம் என்று முழக்கமிட்ட ஈரான் அரசு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை தீவிரவாதியாக அறிவித்தது.

மேலும், பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் ஈரான் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது.

இதில் கொல்லப்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் ஈரான் தளபதி சுலைமானி உள்ளிட்ட ராணுவத்தினரைக் கொலை செய்ததில் 40 அமெரிக்க அதிகாரிகளுக்குப் பங்கு உண்டு என்பதை ஈரான் ராணுவம் கண்டறிந்துள்ளது.

இதையடுத்து, ஈரான் நாட்டு நீதிமன்றம் ஜனாதிபதி ட்ரம்ப் உள்ளிட்ட 40 பேரைக் கைது செய்ய வலியுறுத்தி ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்