தடுப்பூசி எடுத்துக்கொண்ட நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
1806Shares

இஸ்ரேல் நாட்டில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட நூற்றுக்கணக்கானோருக்கு அடுத்த நாளே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் எஞ்சிய உலக நாடுகளைவிட மின்னல் வேகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதுவரை ஒரு மில்லியன் மக்களுக்கும் அதிகமானோருக்கு பைசர் நிறுவன தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.

இது மொத்த இஸ்ரேல் சனத்தொகையின் 12 சதவீதம் என கூறப்படுகிறது. இந்த நிலையிலேயே தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் சுமார் 240 பேர்களுக்கு அடுத்த நாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை பொறுத்தமட்டில் முதல் டோஸ் எடுத்துக்கொண்ட 8-ல் இருந்து 10 நாட்களுக்கு பின்னரே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும், பின்னர் அது 50 சதவீதமளவுக்கு இருக்கும் எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

முதல் டோஸ் எடுத்துக்கொண்டதன் 21 ஆம் நாளில் 2-வது டோஸ் எடுத்த ஒரு வாரத்திற்கு பின்னரே நோய் எதிர்ப்பு சக்தி 95 சதவீதத்தை எட்டும் எனவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

பைசர் தடுப்பூசியின் இரண்டு டோஸ் ஒருவர் எடுத்துக்கொண்டாலும், கொரோனா பாதிப்புக்கு 5 சதவீத வாய்ப்பிருப்பதாகவே கூறப்படுகிறது.

தற்போது இஸ்ரேலில் 240 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் தற்போது ஒரு மில்லியன் மக்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டதில், ஆயிரத்தில் ஒருவருக்கு ஒவ்வாமை உள்ளிட்ட அறிகுறிகள் காணப்பட்டதாக தகவல் வெளியானது.

சொற்பமானவர்களே தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின்னர் ஏற்பட்ட பக்கவிளைவுகளால் மருத்துவமனையை நாடியுள்ளதாக இஸ்ரேல் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்