மலேசியாவில் காணாமல் போன பிரித்தானியா சிறுமி காட்டில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு வெளியானது!

Report Print Basu in ஏனைய நாடுகள்
352Shares

மலேசியாவில் காணாமல் போன பிரித்தானியா சிறுமி காட்டில் நிர்வணமாக சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட வழக்கு தொடர்பில் விசாரணை நடத்திய அதிகாரி தீர்ப்பை அறிவித்துள்ளார்.

அயர்லாந்து-பிரான்ஸ் தம்பதியான மீப்-செபாஸ்டியன் தம்பதியின் குழந்தைதான் 15 வயதான நோரா கோய்ரின். இவர்கள் லண்டனில் 20 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்ட மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு சற்று தொலைவில் அடர்ந்த வனப்பகுதியருகே உள்ள சுற்றுலா ரிசார்ட்டுக்கு வந்து தங்கினர்.

2019 ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி தலைநகர் கோலாலம்பூர் டுசன் பகுதியில் தங்கியிருந்த ஹொட்டல் அறையிலிருந்து 15 வயதான நோரா காணாமல் போனார். நோரா சற்று மூளை வளர்ச்சிக் குறைபாடு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காணாமல் போன சிறுமியை கண்டுபிடிக்கும் பணியில் மலேசியா அதிகாரிகளுக்கு உதவியாக அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் பிரத்தானியா அதிகாரிகள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

10 நாட்களாக பொலிசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் ஆகஸ்ட் 13ம் திகதி, அவர் தங்கியிருந்த ஹொட்டல் இருந்து 2 கி.மி தொலைவில் உள்ள காட்டின் நீர்வீழ்ச்சிக்கு அருகே நோரா உடல் கண்பிடிக்கப்பட்டது.

நோரா கடத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என பெற்றோர்கள் சந்தேகித்த நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரி ஒருவரை மலேசியா நியமித்தது.

விசாரணையை முடித்த அதிகாரி காணொளி காட்சி மூலம் தீர்ப்பளித்தார்.

அதில், காணாமல் போன சிறுமி நோரா இறந்தது ஒரு விபத்து, இதில் யாருக்கும் எந்தவித தொர்பும் இல்லை என விசாரணை அதிகாரி Maimoonah Aid தீர்ப்பளித்தார்.

15 வயது சிறுமி கொலை செய்யப்பட்டார் அல்லது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதற்கான எந்தவித அறிகுறியும் இல்லை என்று அதிகாரி Maimoonah Aid கூறினார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்