பிரபல நாட்டிற்கு சொந்தமான எண்ணெய் கப்பலை சிறைபிடித்த ஈரான்! எதற்காக? வளைகுடாவில் அதிகரிக்கும் பதற்றம்

Report Print Basu in ஏனைய நாடுகள்
248Shares

சவுதி அரேபியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தென் கொரியா எண்ணெய் கப்பலை சிறைபிடித்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தை நோக்கி பயணித்த கப்பல் ஈரான் கடல் பகுதிக்குள் சென்றதால் அது சிறைபிடிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சுவதாக பாதுகாப்பு நிறுவனம் ஒன்று தகவல் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ‘வளைகுடாவை ரசாயனங்களால் மாசுபடுத்தியதற்காக’ நாட்டின் கடற்படை தென் கொரியாவின் MT Hankuk Chemi கப்பலை கைப்பற்றியுள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

MarineTraffic.com-ன் செயற்கைக்கோள் தகவல்களின் படி திங்கள்கிழமை பிற்பகல் ஈரானின் Bandar Abbas நகரில் MT Hankuk Chemi பகுதயில் இருப்பதாக காட்டியது.

MT Hankuk Chemi கப்பல் சவுதி அரேபியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள புஜைரா வரை சென்று கொண்டிருந்தது.

MT Hankuk Chemi கப்பலின் உரிமையாளர்களை உடனடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை.

அமெரிக்க கடற்படையின் 5 வது பிரிவின் செய்தித் தொடர்பாளர் Rebecca Rebarich, அங்குள்ள அதிகாரிகள் நிலைமையை அறிந்து கண்காணித்து வருவதாகக் கூறினார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்