யாரும் நினைத்து பார்க்காத ஒன்று... பேரழிவின் நெருக்கடியில் தென்கொரியா! வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்

Report Print Ragavan Ragavan in ஏனைய நாடுகள்
435Shares

வரலாற்றிலேயே முதல்முறையாக தென்கொரியாவில் கடந்த ஆண்டு மக்கள் தொகை வீழ்ச்சியடைந்துள்ளது.

2020-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பில், தென்கொரியாவில் பிறப்பு எண்ணைக்கையை விட இறப்பு எண்னிக்கை அதிகமாக இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பேரழிவைக் குறிக்கிறது.

உலகிலேயே 12வது பெரிய பொருளாதார நாடான தென்கொரியா, மக்கள் தொகை அடிப்படையில் உலகநாடுகளின் பட்டியலில் 27-வது இடத்தில் உள்ளது.

2020 டிசம்பர் 31-ஆம் திகதி நிலவரப்படி, தென்கொரியாவின் மக்கள் தொகை 51,829,023-ஆக கணக்கிடப்பட்டுள்ளது. இது 2019-ஆம் ஆண்டின் மக்கள் தொகையை விட 20,838 எண்ணிக்கை குறைவு.

அந்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பிறப்பு எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. அத்துடன் இப்போது இறப்புகளும் அதிகரித்து காணப்படுகிறது .

2019-ஆம் ஆண்டில் 275815-ஆக இருந்த இறப்பு எண்ணிக்கை, 2020-ன் முடிவில் 307,764-ஆக அதிகரித்துள்ளது.

தென்கொரியா அதன் பிறப்பு விகிதங்களை உயர்த்துவதற்காக 2006 முதல் கிட்டத்தட்ட 166 பில்லியன் டொலர் செலவழித்துள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், தற்போதைய நிலவரப்படி, 2067-ஆம் ஆண்டில் மக்கள் தொகை 39 மில்லியனாக குறைந்துவிடும் என்றும் மக்களின் சராசரி வயது 62-ஆகி இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் உள்ள ஏற்றத்தாழ்வான பொருளாதாரம், மோசமான சுகாதாரம் மற்றும் கல்வி உள்கட்டமைப்பே இவ்வாறு அழிவின் நெருக்கடி அதிகரித்து வருவதற்கு காரணம் என தென்கொரிய அரசாங்கம் கூறுகிறது.

இந்த ஆபத்தான சூழ்நிலையை மாற்றியமைக்க அரசின் நலத்திட்டங்களில் சில தேவையான மாற்றங்களை கொண்டுவரவுள்ளதாகவும் தென்கொரியா கூறியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்