ரஷ்யாவில் தாம் கொலை செய்த நபர்களின் மாமிசத்தில் இருந்து இனிப்பு தயாரித்து சிறார்களுக்கு அளித்த பாட்டி ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.
விசாரணைக் கைதியாக இருந்த அவருக்கு கொரோனா பாதிக்கப்பட, மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட அவர் தற்போது சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த 81 வயதான Sofia Zhukova என்ற மூதாட்டி, 7 வயது சிறுமி உட்பட மூவரை கொடூரமாக கொலை செய்த வழக்கில் விசாரணையை எதிர்கொண்டு வந்துள்ளார்.
பன்றிகள் வளர்ப்பு பண்ணை ஒன்றில் பணியாற்றி ஓய்வு பெற்ற Sofia Zhukova கடந்த 2005-ல் சிறுமி ஒருவர் கொலை வழக்கில் முதன் முறையாக குற்றஞ்சாட்டப்பட்டார்.
சிறுமியின் தலை மட்டும் பொலிசாரால் மீட்க முடிந்தது. பின்னர் 52 வயது ஆண் காவலாளி ஒருவரும் அவரது 77 வயது நண்பரையும் கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
இந்த மூன்று வழக்குகள் தொடர்பாக விசாரணைக் கைதியாக சிறையில் இருந்த சோபியா ஜுகோவாவுக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, அவரை மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்.
இந்த நிலையில் டிசம்பர் 29 ஆம் திகதி சோபியா ஜுகோவா சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டார்ங்கள் தெரிவித்துள்ளன.
அவர் மரணமடைவதற்கு முன்னர், முடிவுக்கு வராத நான்கு கொலை வழக்கு தொடர்பிலும் பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தனது இரைகளை சோபியா ஜுகோவா கோடரியால் கொடூரமாக கொன்றதாக விசாரணை அதிகாரிகளிடம் அவர் தெரிவித்துள்ளார்.
சோபியா ஜுகோவா கொலை செய்த காவலாளி ஒருவரின் உடல் உறுப்புகளை தமது குளிர்சாதன பெட்டியில் பாதுகாத்து வைத்திருந்ததை 2019-ல் விசாரணை அதிகாரிகள் கண்டு பிடித்தனர், ஆனால் தாம் மனித மாமிசம் உண்ணும் பழக்கம் கொண்டவள் அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
தன்னை பலாத்காரம் செய்ய முயன்றதாலையே தாம் அந்த 52 வயது காவலாளியை கொன்றதாக பொலிசாரிடம் சோபியா ஜுகோவா கூறியுள்ளார்.
மேலும் ஒரு பாடசாலை சிறுமியை கடத்தி வந்து மூன்று வார காலம் தன்னுடன் வைத்திருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வெட்டி நொறுக்கப்பட்ட மனித மாமிசங்களை சோபியா ஜுகோவா தெரு நாய்களுக்கு விருந்தாக்கியுள்ளார்.
மட்டுமின்றி, மானித மாமிசத்தில் அவர் இனிப்பு செய்து அதை, தெருவில் தென்படும் சிறார்களுக்கு அளித்தும் வந்துள்ளார்.
மேலும் அண்டை வீட்டாருக்கு எப்போதும் மாமிச உணவை அன்பளிப்பாகவும் அளித்து வந்துள்ளார், அது மனித மாமிசமாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.