அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பிற்கு கைது ஆணை: சர்வதேச அமைப்புகள் உதவ வலியுறுத்தும் நாடு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
884Shares

ஈரானிய முக்கிய தளபதி குவாசிம் சுலைமானி படுகொலை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதியை கைது செய்ய வலியுறுத்தி ஈரான் அரசு இரண்டாவது முறையாக கைது ஆணை பிறப்பித்துள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மட்டுமின்றி 47 அமெரிக்க அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க ஈரான் கோரிக்கை வைத்துள்ளது.

ஈரான் இந்த விவகாரம் தொடர்பில் தீவிர நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருவதுடன், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறது.

அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டு ஓராண்டு நினைவு நாளை ஈரான் அனுசரிக்க இருக்கும் நிலையில்,

ஜனாதிபதி டிரம்ப் மீது இரண்டாவது முறையாக கைது ஆணை பிறப்பித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஈரானுக்கான தனித்துவம் மிக்க வெளிவிவகார கொள்கையை வகுத்தவர் தளபதி குவாசிம் சுலைமானி.

மட்டுமின்றி, ஈராக் மண்ணில் இருந்து அமெரிக்க படைகளை துரத்தில் நோக்கில் குவாசிம் சுலைமானியின் செயற்பாடுகள் ஈரானிய அரசாங்கத்தால் மிகவும் பாராட்டப்பட்டது.

ஆனால், அமெரிக்க ராணுவத்தினர் தங்கள் சந்தித்த இழப்பிற்கு பதிலடியாகவே தளபதி குவாசிம் சுலைமானியை படுகொலை செய்துள்ளனர்.

ஈரானின் இரண்டாவது மிகவும் சக்திவாய்ந்த நபரின் கொலையானது அப்பகுதியை பதட்டங்களின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

அதற்கு பதிலடியாக ஈரான் கடும் தாக்குதலை முன்னெடுத்தது. ஈராக்கில் முக்கிய அமெரிக்க ராணுவ தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் மொத்த தகவலும் மூடி மறைக்கப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு பிறகு பல எண்ணிக்கையிலான அமெரிக்க ராணுவத்தினர் பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு சிகிச்சை தேடிச் சென்றுள்ளனர்.

இந்த நிலையிலேயே கடந்த ஜூன் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கைது செய்யும் பொருட்டு ஈரான் நிர்வாகம் முதன் முறையாக கைது ஆணை பிறப்பித்தது.

மட்டுமின்றி உலக நாடுகளில் தீவிரவாதத்தை வளர்ப்பதே அமெரிக்கா தான் எனவும் ஈரான் குற்றச்சாடை முன்வைத்தது.

ஆனால் ஈரானின் இந்த கைது ஆணையை Interpol அமைப்பு நிராகரித்தது. அதே நிலை தான் தற்போது கோரப்பட்டுள்ள இரண்டாவது கைது ஆணைக்கும் ஏற்படும் என்றே கருதப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்