ரஷ்யாவில் பெரிய ஓராயிடமிருந்து தனது கால்நடைகளை காப்பாற்ற, விவசாயி ஒருவர் வெறும் கையுடன் சண்டையிட்டு அந்த மிருகத்தை கொன்றுள்ளார்.
ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள கிராமத்திலே இச்சமப்வம் நடந்துள்ளது. ரஷ்யாவில் உள்ள கிராமங்களில் புகுந்து ஓநாய்கள் கால்நடைகளை கொல்வது வழக்கமான ஒன்று தான்.
சம்பவத்தன்று, அதே போல் கிராமத்திற்குள் புகுந்த பெரிய ஓநாய் ஒன்று இரண்டு நாய்களை கொன்று குதிரையையும் தாக்கியுள்ளது.
தனது நாய்கள் ஓநாயால் கொல்லப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயி, தனது கால்நாடைகளை ஓநாயிடமிருந்து காப்பாற்ற, அந்த மிருகத்துடன் வெறும் கையில் சண்டையிட்டுள்ளார்.
பனியில் ஓநாயும் விவசாயிம் சண்டையிட இறுதியில் அவர் அந்த மிருகத்தின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.
பின்னர், கொல்லப்பட்ட ஓநாயுடன் விவசாயி புகைப்படம் எடுத்துள்ளார்.