சிறார் துஸ்பிரயோகமா? இனி இதுதான் கதி: அதிரவைக்கும் முடிவெடுத்த நாடு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
369Shares

இந்தோனேசியா அரசு இனி சிறார் துஸ்பிரயோகத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்படும் என்ற விவாதத்துக்குரிய புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

புதிய நெறிமுறைகளின் அடிப்படையில் சிறார் துஸ்பிரயோக குற்றவாளிகளுக்கு, அவர்களின் தண்டனை காலம் முடிந்த பின்னர் ஆண்மை நீக்கம் செய்யப்பட வேண்டுமா என்பது தொடர்பில் நிபுணர்கள் குழு முடிவெடுக்க உள்ளது.

மட்டுமின்றி அவ்வாறான குற்றவாளிகள் விடுதலையான பின்னர் அவர்களுக்கு எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்பட்டு அவர்களின் அடையாளம் பகிரங்கமாக வெளியிடப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

சிறார் துஸ்பிரயோக வழக்கில் ஆண்மை நீக்கம் செய்யும் சட்டத்திற்கு 2016-ல் இந்தோனேசிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த பின்னர் ஜனாதிபதி Joko Widodo தற்போது புதிய நெறிமுறைகளுக்கு ஆதரவளித்துள்ளார்.

சிறார் துஸ்பிரயோகத்தில் தொடர்ந்து ஈடுபடும் குற்றவாளிகளிகளுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஆண்மை நீக்கம் செய்யப்படுவது சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால், மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஆண்மை நீக்கத்திற்கு பயன்படுத்தப்படும் குறித்த ஊசி மருந்துகளை எடுத்துக்கொள்ளாவிட்டால், அதன் தாக்கம் படிப்படியாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்