சமூக ஊடகத்தில் நீச்சல் உடையில் படங்களை வெளியிட்ட இளம்பெண்: ஆத்திரத்தில் முன்னாள் காதலன் செய்த மோசமான செயல்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
378Shares

பிரேசிலில் இளம்பெண் ஒருவர் நீச்சல் உடையில் சமூக ஊடகத்தில் படங்களை வெளியிட்டதால் ஆத்திரமடைந்த அவரது முன்னாள் காதலன், அவரை கொன்று, கண்டம் துண்டமாக வெட்டி வீசியுள்ளார்.

தனது காதலனைப் பிரிந்த Bianca Lourenco (24) என்ற இளம்பெண், தனது முன்னாள் காதலனை வெறுப்பூட்டும் வகையில், நீச்சல் உடையில் படங்களை சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அத்துடன், அந்த படங்களுக்கு கீழே, நான் நீயாக இருந்திருந்தால், நானே என்னை நிச்சயம் வெறுத்திருப்பேன் என்றும் எழுதியிருந்தார் Bianca.

அந்த படம் வெளியானதைத் தொடர்ந்து திடீரென மாயமானார் Bianca. பின்னர், Biancaவின் உடல் பாகங்கள் சில கிடைக்கவே, பொலிசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

Biancaவின் குடும்பத்தினர், Bianca தனது காதலனை பிரிந்துவிட்டதால், அவரது முன்னாள் காதலன்தான் அவரை கொலை செய்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

Biancaவைக் காணாமல் அவரது உறவினர்கள் அவரை தேடும்போது, மதுபான விடுதி ஒன்றில் அவரது முன்னாள் காதலன் மது அருந்திக்கொண்டிருக்க, அவரிடம் சென்று அவரது அத்தை, Biancaவை எங்கே என்று கேட்க, தான் அவரை கொன்றுவிட்டதாக கூறியுள்ளார் அவரது காதலன்.

Biancaவின் உடலையாவது கொடு என்று அவரது குடும்பத்தினர் கோரியதும், கதையையே மாற்றி, தனக்கு எதுவுமே தெரியாது என்று கூறிவிட்டாராம் அந்த காதலன். பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்