மைனஸ் 32 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை! உயிர் உறையும் குளிரில் தத்தளிக்கும் ஸ்பெயின் மக்கள்

Report Print Ragavan Ragavan in ஏனைய நாடுகள்
230Shares

வரலாறு காணாத பனிப்பொழிவால் ஸ்பெயின் நாட்டு மக்கள் மிகுந்த குளிரில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்பெயின் நாட்டில் கடந்த சில தினங்களாக கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிர்ந்த கற்று வீசிவருகிறது. இதன் காரணமாக அந்நாட்டின் வெப்பநிலை வரலாறு காணாத அளவிற்கு மைனஸ் 32 டிகிரி செல்சியஸாக குறைந்து பதிவாகியுள்ளது.

வடகிழக்கு ஸ்பெயினில் லீடாவில் உள்ள எஸ்டானி-ஜென்டோவில் இந்த குறைந்தபட்ச வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது கடைசியாக 1956-ஆம் ஆண்டு பதிவான மிக்க குறைந்த வெப்பநிலையில் விட 2 டிகிரி குறைவு என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இனி வரும் நாட்களில் மத்திய மற்றும் வடக்கு ஸ்பெயினில் கூடுதலான பனிப்பொழிவு இருக்கும் என்றும், வெப்பநிலை மேலும் குறையலாம் என எதிர்பார்ப்பதாகவும் State Meterololgical Agency தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், வடக்கு ஸ்பெயினில் உள்ள லூகோ மாகாணத்தில், 75 வயது முதியவர் ஒருவர் பணிப்புயலில் தனது கார் சிக்கிக்கொண்டதையடுத்து, இந்த கடும் குளிறால் அங்கிருந்து இறங்கி நடந்து செல்ல முயன்றுள்ளார். அவரை Navia de Suarna பொலிஸ் விரைவாக சென்று மீட்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்