விருந்துக்கு அழைத்து இளம்பெண் படுகொலை... துஸ்பிரயோகம் செய்யப்பட்ட காதலன்: அதிர்ச்சி பின்னணி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
789Shares

துருக்கியில் உறவினருடனான கட்டாயத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காதலனுடன் மாயமான இளம்பெண் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சிய்யை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கியின் கமான் மாவட்டத்தில் உள்ள பேயரமோசு கிராமத்திலேயே குறித்த பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது.

24 வயதேயான Vildan Ince என்பவரை குடும்பத்தினர் அவரது உறவினர் ஒருவருக்கு கட்டாயத் திருமணம் செய்து வைக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் அந்த திருமணத்தில் விருப்பமற்ற Vildan Ince, தமது காதலனான 25 வயது Osman Celik என்பவருடம் மாயமாகியுள்ளார்.

இச்சம்பவம் நடந்து 2 மாதங்கள் கடந்த நிலையில், புத்தாண்டு கொண்டாடும் பொருட்டு, தம்பதிகள் இருவரும் சொந்த கிராமத்திற்கு திரும்பியுள்ளனர்.

இந்த தகவல் Vildan Ince குடும்பத்தாருக்கு தெரிய வர, அவர்கள் காதல் திருமணத்தை ஏற்பதாக கூறி, இருவரையும் விருந்துக்கு அழைத்துள்ளனர்.

இதை நம்பிச் சென்ற Vildan Ince வீட்டின் கழிவறையில் வைத்து கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.

அவரது காதலர் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் நிர்வாணப்படுத்தப்பட்டு, துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கப்பட்டுள்ளார், பின்னர் அவரையும் கத்தியால் தாக்கி கொன்றுள்ளனர்.

இருவரையும் கழிவறையில் வைத்தே கொலை செய்து, பின்னர் சடலங்களை கிராமத்திற்கு வெளியே கொண்டு சென்று புதைத்துள்ளனர்.

இதனிடையே, Osman Celik தொடர்பில் அவரது குடும்பத்தினர் பொலிசாரை நாடியுள்ளனர்.

இந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் Vildan Ince குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் அளித்த முரணான தகவல், இந்த கொலையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்