கொரோனா பரிசோதனை... பொலிசாரை அடித்து துவைத்த தந்தை, மகன்: சீனாவில் சம்பவம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
114Shares

சீனாவில் கொரோனா பரிசோதனைக்காக வரிசையில் வருமாறு கூறிய பொலிசாரை தந்தை மற்றும் மகன் இணைந்து கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சீனாவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மீண்டும் பரவத்தொடங்கியுள்ளது.

இதனால், பாதிப்புக்கு உள்ளான மாகாணங்களில் மக்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சீனாவின் லியாங்கிங் மாகாணம் ஷேன்யாங் நகரில் கடந்த 1-ம் திகதி கொரோனா பரிசோதனை நடைபெற்று வந்தது. இந்த பரிசோதனையில் பங்கேற்க நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நின்றுகொண்டிருந்தனர்.

அதில் லின் என்ற குடும்ப பெயர் கொண்ட தந்தை மற்றும் மகன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் கூட்டத்தை முந்திக்கொண்டு பரிசோதனை எடுக்க வேண்டும் என அந்த தந்தை நினைத்துள்ளார்.

இதனால், வரிசையில் தனக்கு முன்னால் இருந்தவர்களை முந்திக்கொண்டு சென்றுள்ளார். இதனையடுத்து, அந்த தந்தைக்கு முன்னால் நின்றவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வாக்குவாதத்தை கவனித்த பாதுகாப்பு பணியில் இருந்த சாங் என்ற காவலர் சண்டையை நிறுத்த முயற்சித்துள்ளார். மேலும், கொரோனா பரிசோதனைக்கு வரிசையில் நிற்குமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது அந்த தந்தைக்கும் காவலருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தந்தை காவலருடன் உடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை கவனித்த மகன் லின்னும் வரிசையை விட்டு வெளியேறி காவலருடன் வாக்குவாதம் நடத்தியுள்ளார்.

இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியுள்ளது. தந்தை மற்றும் மகன் லின் இணைந்து காவலர் சாங்கை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் காவலரின் தலை, முகம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடுமையான காயம் ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பிற காவலர்கள் தாக்குதல் நடத்திய தந்தை, மகன் லின் ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்கள் மீது வழக்குத்தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக ஷேன்யாங் நகரம் குவாங்க்கியூ மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் பொலிசார் மீது தாக்குதல் நடத்தியது தந்தை, மகன் என்பது உறுதியானது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று வெளியானது. அதில், காவலர் சாங் மீது தாக்குதல் நடத்திய லின்னுக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனையும் அவரது தந்தைக்கு 10 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்