அந்த விடயத்தில் பிரித்தானியா, அமெரிக்காவை நம்ப முடியாது: ஈரான் உச்ச தலைவர் பதிவை நீக்கிய டுவிட்டர்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
90Shares

பிரித்தானியா மற்றும் அமெரிக்காவின் கொரோனா தடுப்பு மருந்துகள் நம்கத்தன்மையற்றவை என கூறிய ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் கருத்துகளை டுவிட்டர் நீக்கியுள்ளது.

பிரித்தானியா மற்றும் அமெரிக்க நாடுகளில் தயாராகும் கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதிக்கு தடை விதித்த அலி கமேனி, மேற்கத்திய நாடுகளை இந்த விடயத்தில் நம்ப முடியாது எனவும் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

அடுத்த நாடுகளை கெடுப்பதில் அதிக அக்கறை காட்டும் நாடுகள் அவை என குறிப்பிட்டுள்ள அலி கமேனி,

பிரித்தானியா, அமெரிக்கா மட்டுமல்ல, பிரான்ஸ் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி கூட நம்பகத்தன்மை இல்லாது தான் என்றார்.

தேசிய தொலைக்காட்சியில் பேசிய இக்கருத்துக்களை அலி கமேனி தமது ஆங்கிலம், பேர்சிய மற்றும் அரேபிய மொழி டுவிட்டர் பக்கங்களில் பதிவேற்றியுள்ளார்.

ஆனால், அலி கமேனியின் கருத்து தங்கள் கொள்கைக்கு எதிராக இருப்பதாக கூறி, அவரது ஆங்கிலம் மற்றும் அரேபிய மொழி பதிவுகளை நீக்கியுள்ளது டுவிட்டர் நிர்வாகம்.

இருப்பினும் அலி கமேனியின் பேர்சிய மொழி டுவிட்டர் பக்கத்தில் இந்த பிரித்தானிய, அமெரிக்க தடுப்பு மருந்துகளுக்கு எதிரான கருத்து நீக்கப்படவில்லை.

அலி கமேனியின் கொரோனா தடுப்பு மருந்து தொடர்பான கருத்து வெளியான சில மணி நேரங்களில்,

அமெரிக்க தன்னார்வலர் ஒருவரால் ஈரானின் ரெட் கிரசண்ட் சொசைட்டிக்கு அளிப்பதாக இருந்த பைசர் நிறுவனத்தின் 150,000 டோஸ் கொரோனா தடுப்பூசி ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் உச்ச தலைவரின் பேச்சுக்கு தாங்கள் கட்டுப்படுவதாகவும், அதனாலையே பைசர் நிறுவன தடுப்பூசியை நிராகரித்ததாகவும் ரெட் கிரசண்ட் சொசைட்டி அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கத்திய நாடுகளின் கொரோனா தடுப்பூசியை ஈரான் நிராகரித்துள்ள நிலையில், இந்தியா, சீனா அல்லது ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி இறக்குமதிக்கு முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என கூறப்படுகிறது.

ஈரானில் ஒட்டுமொத்தமாக 1.2 மில்லியன் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி 55,000 பேர்கள் மரணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்