கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு காரணமாக மாட்ரிட் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
கடும் பனிப்பொழிவால் மாட்ரிட் நகரம் கண்ணுக்கு புலப்படாதவாறு உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இதுவே முதன் முறை என கூறப்படுகிறது.
பாதுகாப்பு கருதி மாட்ரிட் விமான நிலையத்தை வெள்ளிக்கிழமை மூடியுள்ளனர். சனிக்கிழமை மேலும் 20 செ.மீற்றர் அளவுக்கு பனிப்பொழிவு இருக்கலாம் என கூறப்படுகிறது.
மாட்ரிட் மட்டுமின்றி நாட்டின் எஞ்சிய பகுதிகளிலும் கடும் பனிப்பொழுவு காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பனிப்பொழிவு காரணமாக மூவர் இறந்துள்ளனர் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் மேலதிக தகவல்களை வெளியிட மறுத்துள்ளனர்.
இதனிடையே பிராதான நகரங்களில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல சாலைகளில் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாட்ரிட் மற்றும் வலென்சியா இடையேயான ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்து மற்றும் குப்பை அள்ளும் நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குடியிருப்பில் இருந்து வெளியே வர வேண்டாம் என மாட்ரிட் நகர மேயர் அறிவுறுத்தியுள்ளார்.