இந்தோனேசிய விமானம் ஒன்று 10,000 அடி உயரத்திலிருந்து கடலில் விழுந்த நிலையில், ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் கடலுக்கடியில் சென்று எடுத்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
சனிக்கிழமை 62 பேருடன் கடலில் விழுந்த Sriwijaya Air போயிங் விமானத்தின் கதி என்னவென ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் கடலுக்கடியில் ஆராய சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
10,000 அடி உயரத்திலிருந்து ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் கடலில் விழுந்த அந்த விமானம் கடல் பரப்பை தொடுவது வரை உடையாமல் முழுமையாகவே இருந்ததாக ஒரு செய்தியும் வெளியாகியுள்ளது.
அந்த விமானத்திலிருந்த 52 பேரில் ஏழு சிறுபிள்ளைகளும், மூன்று குழந்தைகளும் அடங்குவர்.
இந்நிலையில், ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் படம்பிடித்த அந்த வீடியோவில் ஒரு சிறுபிள்ளையின் முதுகுப்பை முதலான பொருட்களும், விமானத்தின் பாகங்களும் கூடவே மனித உடல் பாகங்களும் கிடைத்துள்ளன.
அந்த உடல் பாகங்களை பயன்படுத்தி DNA பரிசோதனை செய்து இறந்தவர்களை அடையாளம் காண முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.