அமெரிக்க போர் விமானங்கள், கப்பல்களை தாக்கி அழியுங்கள்! விஞ்ஞானிகள் குழு விண்வெளி படைக்கு அனுப்பிய பரபரப்பு கடிதம்

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஈரானுக்குள் ஊடுருவும் அமெரிக்க போர் விமானங்கள் மற்றும் போர்கப்பல்களை தாக்கி அழிக்குமாறு விலியுறுத்தி அந்நாட்டு விஞ்ஞானிகள் குழு, ஐ.ஆர்.ஜி.சி.-யின் விண்வெளி படைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

அமெரிக்க இராணுவம் இரண்டு B-52 போர் விமானங்களை மத்திய கிழக்கிற்கு அனுப்பிய ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த கடிதம் அனுப்பப்ட்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள தங்கள் நட்பு நாடுகளின் நலனை பாதுகாக்க போர் விமானங்களை அனுப்பியதாக அமெரிக்க குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், 840 ஈரான் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கையெழுத்திட்டு ஐ.ஆர்.ஜி.சி விமானப்படை தளபதி பிரிகேடியர் ஜெனரல் Amir Ali Hajizadeh-க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அதில், ஈரானின் எல்லைகுள் ஊடுருவும் அமெரிக்க போர் விமானங்களையும், குறிப்பாக B-52 போர் விமானங்களையும் , அமெரிக்க போர்க்கப்பல்களையும் அழிக்குமாறு ஐ.ஆர்.ஜி.சி. விண்வெளிப் படையை வலியுறுத்தியுள்ளனர்.

மேற்கத்திய, சியோனிச மற்றும் அரபு ஊடகங்களால் அமெரிக்காவின் வெற்று பிரமிப்பு மற்றும் சக்தியை பெரிதுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த உண்மையற்ற மற்றும் ஜோடிக்கப்பட்ட பிம்பத்தை சிதைக்க வேண்டும் என ஜெனரல் Amir Ali Hajizadeh-த்திடம் பேராசிரியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்