கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம்: பக்கவிளைவுகளால் மரணம் என்பதை உறுதி செய்துள்ள நாடு

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
1488Shares

நார்வே நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணமடைந்துள்ள நிலையில், அவர்களுக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை 13 பேருக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர்கள் அனைவருமே கொரோனாவின் பக்க விளைவுகளால் அவதியுற்றிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவருமே சமீபத்தில் பைசர் நிறுவனத்தின் தயாரிப்பான கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்.

அத்துடன், அவர்கள் அனைவரும் முதியோர் இல்லங்களில் தங்கியிருந்த 80 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

நார்வே மருத்துவ ஏஜன்சியின் தலைமை மருத்துவரான Sigurd Hortemo, தடுப்பூசியின் பக்க விளைவுகள்தான் இந்த உயிரிழப்புகளுக்கு காரணமாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்