பிலிப்பைன்சில், மொடலாகவேண்டும் என ஆசைப்பட்ட ஒரு அழகிய இளம்பெண், இன்று இரும்புக்கூண்டில் அடைக்கப்பட்டுள்ளார்.
வாழ்வில் புகழ் பெற வேண்டும் என்ற ஆசையிலிருந்த Bebe (29) என்ற அந்த இளம்பெண்ணுக்கு 2014ஆம் ஆண்டு psychotic depression என்ற மன நல பாதிப்பு ஏற்பட்டது.
இல்லாததை இருப்பது போல் கற்பனை செய்து கொள்ளும் மன நல பாதிப்பு காரணமாக மன நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் Bebe.
சிகிச்சைக்குப்பின் சற்று முன்னேற்றம் அடைந்து வீடு திரும்பிய Bebeஐ விதி மீண்டும் பின்னோக்கித்தள்ளியது.
ஆம், Bebeஇன் தந்தை 2015ஆம் ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட, Bebeஇன் சிகிச்சைக்கு செலவு செய்ய முடியாமல் போனது.
நிலைமை மீண்டும் மோசமாக, Bebe முரட்டுத்தனமாக மாறிப்போனார், கையில் கிடைத்தை எடுத்து எறிவது, வீட்டை விட்டு வெளியேறி பேருந்தை இயக்குவது என இருந்த Bebe, ஒரு முறை காணாமல் போனார், ஒரு வாரம் கழித்துதான் பொலிசார் அவரைக் கண்டுபிடித்து வீடு கொண்டுவந்தார்கள்.
எனவே, வேறு வழியின்றி, அவரது பாதுகாப்பு கருதி, வீட்டுக்குள் இரும்புக்கூண்டு ஒன்றை தயார் செய்து அதற்குள் Bebeஐ அடைத்துள்ளார்கள்.
மொடலாக வாழ ஆசைப்பட்ட கனவெல்லாம் கலைந்துபோக, மருத்துவச் செலவுக்கு பணம் இல்லாததால், இன்று ஒரு இரும்புக்கூண்டுக்குள் பரிதாபமான நிலையில் வாழ்ந்து வருகிறார் Bebe.