விமானத்தில் பயணிகளின் குழந்தைகளுக்கு இலவசம்! எந்த நாட்டில் தெரியுமா? பிரபல விமான நிறுவனம் அறிவிப்பு

Report Print Santhan in ஏனைய நாடுகள்
331Shares

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பிரபல விமான நிறுவனம் குழந்தைகளுக்கான பயணம் இலவசம் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உலகையே கொரோனா என்னும் கொடியா வைரஸ் ஆட்டிப் படைத்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஒரு சில விமான நிறுவனங்கள் கடுமையான நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கொரோனா வைரஸ் எளிதாக ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரவும் என்பதால், விமானத்தில் பயணம் செய்ய பயணிகள் பயப்படுகின்றனர்.

இதனால் பயணிகளை கவருவதற்கு விமான நிறுவனங்கள் பல சலுகைகளை அறிவித்து வருகிறது.

அந்த வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த எட்டிகாட்(Etihad) நிறுவனம், அபுதாபி அல்லது துபாய்க்கு டிக்கெட் புக் செய்தால், பெற்றோருடன் வரும் குழந்தைகளுக்கு இலவசப் பயணம் என்ற சலுகையை அறிவித்துள்ளது.

செப்டம்பர் இறுதி வரையிலான காலத்தில் பயணிக்க ஜனவரி 28ஆம் திகதிக்கு முன் பயணச்சீட்டுப் பதிவு செய்தால் குழந்தைகளை இலவசமாக உடன் அழைத்துச் செல்லலாம் என அறிவித்துள்ளது.

ஒவ்வொரு பெரியவரும் தங்களுடன் ஒரு குழந்தையை இலவசமாக அழைத்துச் செல்லலாம் என்றும், 2 பெரியவர்கள் பயணச்சீட்டு எடுத்தால் அவர்களுடன் 4 குழந்தைகளை அழைத்துச் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகையானது 11 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்