உலகளவில் புலம் பெயர்ந்து வசிப்போரில் முதலிடத்தில் இருப்பது எந்த நாட்டை சேர்ந்தவர்கள் தெரியுமா? ஐ.நா வெளியிட்ட பட்டியல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
29714Shares

உலகளவில் பல்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்து வசிப்போரில், இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளதாக, ஐ.நா தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான 2020ம் ஆண்டிற்கான ஆய்வறிக்கையை, ஐ.நா மக்கள் தொகை விவகாரங்கள் பிரிவு வெளியிட்டுள்ளது.

இது குறித்து மக்கள் தொகை விவகாரங்கள் பிரிவின் அதிகாரி பிளேர் மெனோசி கூறுகையில், இந்தியாவைச் சேர்ந்த, 1.80 கோடி பேர், வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.

இந்த வகையில், சக்தி வாய்ந்த, மிகத் துடிப்பான இந்தியர்கள், புலம் பெயர்ந்தோரில் முதலிடத்தை பிடித்து உள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவில் தான், இந்தியர்கள் அதிகமானோர் வசிக்கின்றனர். அனைத்து கண்டங்கள் மற்றும் பிராந்தியங்களில், வளைகுடா முதல், வட அமெரிக்கா வரையிலும், அவுஸ்திரேலியா முதல், பிரிட்டன் வரையிலும், இந்தியர்கள் தான் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த, 20 ஆண்டு களில், உலகளவில் புலம் பெயர்ந்தோர் எண்ணிக்கை, 17.30 கோடியில் இருந்து, 28.10 கோடியாக அதிகரித்து உள்ளது.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக மெக்சிகோ, ரஷ்யா, சீனா, சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், அதிக அளவில் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட, 179 நாடுகளில், அமெரிக்கா, ஜெர்மனி, சவுதி அரேபியா, ரஷ்யா, பிரிட்டன் ஆகிய நாடுகளில், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்