மொத்தமாக சுற்றிவளைத்த கிளர்ச்சியாளர்கள்: கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
305Shares

சூடானில் கிளர்ச்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் 83 பேர் கொல்லப்பட்டதுடன் 160 பேர் காயங்களுடன் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் 2003 ஆம் ஆண்டு முதல் டர்பர் மாகாணத்தை மையமாக கொண்டு உள்நாட்டு போர் நிலவி வருகிறது.

அரசு படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் நடந்த இந்த உள்நாட்டு போரில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரை முடிவுக்கு கொண்டுவர கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனால், பல ஆண்டுகளாக நீடித்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், டர்பர் மாகாணத்தில் உள்ள கிளர்ச்சியாளர்களும் அரசுப்படையினரும் போர் நிறுத்தத்தை மீறி அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் மசாலிட் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் அரபு இனத்தைச் சேர்ந்த ஒருவரைக் கொன்றதாக கூறப்படுகிறது.

இதனால் இரு இனத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கிளர்ச்சியாளர்கள்,

டர்பர் மாகாணத்தில் உள்ள El Geneina பகுதியை சுற்றிவளைத்து கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் 83 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 160 பேர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.

கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு அகதிகள் முகாம் ஒன்றும் இலக்காகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்