20 வயது வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்டு சர்ச்சையை கிளப்பிய 35 வயது பெண்ணுக்கு குழந்தை பிறந்தது! வெளியான புகைப்படம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
265Shares

ரஷ்யாவில் தனது வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்டு சர்ச்சையை ஏற்படுத்திய பெண், குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

Marina Balmasheva (35) என்ற பெண் தனது கணவர் Alexey (45) உடன் வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் தம்பதியின் வளர்ப்பு மகனான Vladimir 'Voya' Shavyrin (20) என்பவரால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

அதாவது வளர்ப்பு மகனான Shavyrin உடன் Marinaவுக்கு தொடர்பு ஏற்பட்டதை கண்டுபிடித்து Alexey அவரை விவாகரத்து செய்தார்.

இதன் பின்னர் Marina-வும் Shavyrinவும் திருமணம் செய்து கொண்டனர். இந்த செய்தி உலகெங்கிலும் பரவி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி விவாத பொருளானது.

இந்த நிலையில் Marina கர்ப்பமானார். இதையடுத்து சமீபத்தில் Marina - Shavyrinவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

ரஷ்யாவின் Krasnodar நகரில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் தான் Marinaவுக்கு பிரசவம் நடந்துள்ளது.

குழந்தை 3 கிலோ எடையுடன் பிறந்த நிலையில் அதற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை என தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்