அனைத்து கொரோனா வைரஸ் வகைகளை விட தென்னாப்பிரிக்க வகை அதிகம் பரவக்கூடியதா? ஆய்வின் மூலம் முடிவுக்கு வந்த விஞ்ஞானிகள்

Report Print Ragavan Ragavan in ஏனைய நாடுகள்
98Shares

புதிய தென்னாப்பிரிக்க வகை கொரோனா வைரஸ் 50 சதவீதம் அதிகம் பரவக்கூடியது, ஆனால் இது மிகவும் ஆபத்தானது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

1.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆபிரிக்க கண்டத்தில் உள்ள வேறு எந்த நாட்டையும் விட தென்னாப்பிரிக்கா அதிகமான பாதிப்புகளை பதிவு செய்துள்ளது, மேலும் இங்கு இதுவரை 37,105-க்கும் அதிகாமனூர் இறந்துள்ளனர்.

கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த புதிய வகை வைரஸ், பிரித்தானியாவில் கணடறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் உட்பட முந்தைய அனைத்து வகை கொரோனா வைரஸைகே காட்டிலும் அதிகம் பறவைக்கு கூடியதாகவும், அதிகம் கொள்ளக்கூடியதாகவும், பல நாடுகளிலிருந்த்து விஞ்ஞானிகள் கருத்துக்களை முன் வைத்தனர்.

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு முந்தைய வைரஸ்களை விட 50 சதவீதம் அதிகம் தொற்றக்கூடியது என்று தென்னாப்பிரிக்க சுகாதார அமைச்சின் விஞ்ஞானக் குழுவின் இணைத் தலைவர், தொற்றுநோயியல் நிபுணர் பேராசிரியர் சலீம் அப்தூல் கரீம் தெரிவித்தார்.

அதேபோல், "புதிய கோவிட் மாறுபாடு அசல் மாறுபாட்டை விட கடுமையானது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை," என்று அவர் கூறினார்.

நாடு முழுவதும் உள்ள முக்கிய நோய்த்தொற்றுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் பகுப்பாய்விலிருந்து, வல்லுநர்கள் - இப்போது தென்னாப்பிரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் உருமாறிய கொரோனா வைரஸ் பற்றி முடிவுகளை எடுத்துள்ளனர்.

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட அதே நேரத்தில்பிரித்தானியாவிலும் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இது 70% அதிகம் பரவக்கூடியது என்று உலகம் முழுக்க உள்ள விஞ்ஞானிகள் ஆய்வின் அடிப்படையில் ஒப்புக்கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், வைரஸின் புதிய மாறுபாட்டிற்கு எதிராக தற்போதைய தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருக்கும் என்பது இன்னும் தெரியவில்லை என்று தொற்றுநோயியல் நிபுணர் அப்துல் கரீம் கூறுகிறார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்