வெறும் 5 நாட்களில் சீனா 4,000 பேர்களை தனிமைப்படுத்த தேவையான முகாம்களை கட்டி முடித்துள்ள சம்பவம், தற்போது உலக நாடுகளில் மற்றும் ஒரு பீதியை கிளப்ப்பியுள்ளது.
சீனாவில் கடந்த 2019 நவம்பர்- டிசம்பர் மாதங்களில் கண்டறியப்பட்ட கொரோனா பரவல்,
தற்போது அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய, ஆசிய நாடுகளை மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
பொருளாதார சரிவு ஒருபக்கம் உச்சம் தொட, நாளுக்கு நாள் கொரோனா மரண எண்ணிக்கையும் பல நாடுகளில் உச்சம் கண்டு வருகிறது.
இந்த நிலையில், கொரோனா பரவலை முற்றாக கட்டுப்படுத்திவிட்டோம் என அறிவித்திருந்த சீனா,
தற்போது திடீரென்று 4,000 பேர்களுக்கு போதுமான தனிமைப்படுத்துதல் முகாம் ஒன்றை புதிதாக, அதுவும் 5 நாட்களில் கட்டி முடித்துள்ளது.
600 பேர்கள் கொண்ட தொழிலாளர்கள் குழு ஒன்று இரவு பகலாக, 24 மணி நேரமும் இடைவிடாமல் இந்த அவசர சிகிச்சை பிரிவை கட்டி முடித்துள்ளனர்.
சீனாவின் வடக்கு ஹெபே மாகாணத்தில் புதிதாக உருமாற்றம் கண்ட கொரோனா பரவல் அதிகமாக பதிவான நிலையிலேயே இந்த புதிய முகாம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
108 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த முகாமில், ஆயிரக்கணக்கான கொரோனா நோயாளிகளை அல்லது கொரோனா பாதிப்புக்கு உள்ளாகலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களை தங்க வைக்க உள்ளனர்.
செவ்வாயன்று 118 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
இதில், 43 பேர் ஜிலின் மாகாணத்தில் உள்ளனர். தலைநகர் பீஜிங் நகருக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள ஹெபே மாகாணத்தில் 35 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர்.
சீனாவின் இந்த அவசர அவசரமாக முகாம் கட்டும் நடவடிக்கையானது எஞ்சிய உலக நாடுகளை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
108 ஏக்கர் பரப்பளவில் 4,000 பேர்களுக்கான முகாம் அமைக்கப்பட்டுள்ளது, சீனா மீதான சந்தேகத்தை மேலும் உறுதி செய்வதாக கூறப்படுகிறது.