'பழிவாங்குவதை தவிர்க்க முடியாது' டிரம்பை எச்சரித்து மிரட்டலான புகைப்படத்தை வெளியிட்ட ஈரான் தலைவர்!

Report Print Ragavan Ragavan in ஏனைய நாடுகள்
170Shares

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, கடந்த ஆண்டு ஈரானின் உயர்மட்ட ஜெனரல் காஸ்ஸெம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்குவதற்காக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொல்லப்பட வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

கடந்த 2020 ஜனவரி 3-ஆம் திகதி முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டதன்படி ஈரானின் உயர்மட்ட இராணுவத் தளபதி காஸ்ஸெம் சுலைமானி ட்ரோன் தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து 'ஜெனரல் சுலைமானியைக் கொலை செய்ய உத்தரவிட்டவர்கள் மற்றும் இதைச் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்' என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி டிசம்பர் 16 அன்று ட்வீட் செய்தார்.

அந்த நேரத்தில், சுலைமானி கொல்லப்பட்ட முதல் ஆண்டு நிறைவுக்கு முன்னதாக டிரம்பை பழிவாங்குவதாக உறுதிமொழியைப் புதுப்பித்தன.

ஜனவரி 20-ஆம் திகதி ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவிப் பிரமாணம் செய்யும் விழாவிலும் கலந்து கொள்ளாமல், சில மணிநேரங்களுக்கு முன்பாகவே புறப்பட்டார்.

இந்நிலையில், இன்று மீண்டும் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி ஒரு பகிரங்கமான டீவீட்டை வெளியிட்டுள்ளார்.

அதில் டிரம்ப் கோல்ப் விளையாடுவதைப் போலவும், அவருக்கு மேலே போர் விமானம் பறப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்த அவர், "பழிவாங்குவது தவிர்க்க முடியாதது" என்று பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது உலகம் முழுவதும் வைரலாகிவருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்